தமிழ் சினிமாவில் அடுத்த பேரெதிர்ச்சி சத்யராஜ் அம்மாவை தொடர்ந்து வில்லன் நடிகர் வாசு விக்ரமின் தாயார் மரணம்.! இரங்கல் தெரிவித்த முதல்வர்

vasu vikram

Actor Vasu Vikram: நேற்று பிரபல நடிகர் சத்யராஜின் தாயார் மரணமடைந்த நிலையில் இதனை அடுத்து இன்று மேலும் மற்றொரு பிரபல நடிகரின் தாயார் மரண தகவல் தமிழ் திரைவுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது, பிரபல நடிகர் எம்.ஆர் ராதாவின் பேரனும், நடிகர் எம்.ஆர் வாசுவின் மகனுமான வாசு விக்ரமின் தாயார் லலித்தாம்பாள் காலமானார்.

எம்.ஆர் வாசு விக்ரம் பாலைவனத்தில் பட்டாம்பூச்சி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் வில்லனாகவும், காமெடியனாகவும் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு திரைப்படங்களை தொடர்ந்து சின்னத்திரையிலும் நடிக்க ஆரம்பித்தார்.

அப்படி சித்தி, செல்லமே, செல்வி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் வாசு அவர்களின் மனைவியும் நடிகர் வாசு விக்ரம் அவர்களின் தாயாரும் லலிதாம்பாள் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை கோடம்பாக்கம் ஆர்என் நம்பியார் தெருவில் உள்ள வாசுவின் வீட்டில் இவருடைய உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

vasu vikram
vasu vikram

எனவே இவருடைய உடலுக்கு ஏராளமான பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்து வருகின்றனர். லலிதாம்பாள் தனது 83 வயதில் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் முதல்வர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நடிகர் எம்.ஆர் வாசு அவர்களின் மனைவியும் நடிகர் வாசு விக்ரம் அவர்களின் தாயாரமான திருமதி லலிதாம்பாள் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து வருத்தமடைகிறேன்.

அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.  நேற்று நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் மரணமடைந்த நிலையில் சென்னை  கோடம்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.