Vadivelu : காலத்திற்கு ஏற்றவாறு தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் மாறிக்கொண்டே இருக்கின்றனர் நாகேஷை தொடர்ந்து கவுண்டமணி, செந்தில் பல வருடங்கள் வலம் வந்தனர் அவர்களை தொடர்ந்து தற்பொழுது தமிழ் திரையுலகில் கெத்து காட்டி வருகிறார் நடிகர் வடிவேலு.
என் தங்கை கல்யாணி என்னும் படத்தில் நடித்த அறிமுகமானார் ஆனால் என் ராசாவின் மனசிலே படம் தான் இவரை வெளி உலகத்திற்கு காட்டியது அதன் பிறகு டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து காமெடியன்னாக நடித்து வெற்றிகளை அள்ளினார். இப்படி ஓடிக்கொண்டு இருந்த வடிவேலு ஹீரோவாக இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, தெனாலிராமன், இந்திரலோகத்தில் நா அழகப்பன், எலி, நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்து அசத்தார்.
இப்படி ஓடிக்கொண்டிருந்த வடிவேலு கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது மத்தியிலும் கைதட்டல் வாங்கினார் அதனை தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் கோபாலுவாக மீண்டும் நடித்துள்ளார் இந்த படம் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். திரையுலகில் பிஸியாக வடிவேலு தனது குடும்பம் மற்றும் சொந்த பந்தம் என அனைவரையும் மாத்திற்கு ஒரு தடவையாவது சென்று பார்த்து வருவார்.
மேலும் அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருவது வழக்கம். இதனால் அவரது உறவினர்கள் அனைவரும் வடிவேலுவை புகழ்ந்துதான் பேசியுள்ளனர் வடிவேலுவின் தம்பி கூட அப்படிதான் அண்ணன் நடிச்சா போதும் நாங்க சந்தோஷமாக இருப்போம் என கூறியும் உள்ளனர்.
இப்படிப்பட்ட வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் 55 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எழுதி உள்ளார். வடிவேலுவின் சகோதரர் ஜெகதீசன் மதுரையில் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார் பிறகு டி ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பின்னர் படங்களில் நடிக்காமல் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக கல்லீரலில் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இவரது உடலை அஞ்சலிக்காக விரகனூரில் வைக்கப்பட்டுள்ளது.