காமெடிக்கு பெயர்போன நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் வைகை புயல் வடிவேலு சமீப காலமாக திரை உலகில் இவர் நடிக்காவிட்டாலும் இவரது காமெடியை கிரியேட்டர் மீம்ஸ்களாக ரெடி செய்து இணையதள பக்கத்தில் ஷேர் செய்து வருவதால் வைகைபுயல் ரசிகர்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர்.
இருப்பினும் அவரது ரசிகர்கள் வெள்ளித்திரையில் காணத்தான் ஆசைப்பட்டார்கள் அது பல வருடங்களாக நிறைவேறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது லைக்கா நிறுவனத்துடன் வடிவேலு கைகோர்த்து தற்போது ஐந்து திரைப்படங்களில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர் மேலும் முதல் படமாக நாய் சேகர் என்ற திரைப்படம் எடுக்கபட்டு வருகிறது.
இந்த படத்திற்காக தற்போது நடித்து வருகிறார் படப்பிடிப்பின் போது அவர் கலந்து கொண்டார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. அதில் வடிவேலு மெலிந்து போய் இருப்பது ரசிகர்களை சோகம் அடைய வைத்துள்ளது.
நாய்சேகர் திரைப்படத்தை சுராஜ் என்பவர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு வருடங்களுக்கு பிறகு வடிவேலு சினிமாவில் ரீ என்ட்ரி ஆகுவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கிறது
மேலும் வடிவேலு ரசிகர்கள் நாய் சேகர் படத்தை வேறொரு லெவலில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.