அடக்க நினைத்த வடிவேலு.. திமிரி எழுந்த தம்பி ராமையா.! என் ரூட்டே தனி என நிரூபித்த சம்பவம்

vadivelu
vadivelu

Actor Vedivelu: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வரும் வடிவேலு சில வருடங்களுக்குப் பிறகு தற்போது தான் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். இவர் செய்த சில தவறுகளினால் சினிமாவில் ரெட் கார்ட் கொடுக்கும் அளவிற்கு போனது எனவே படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது.

பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் ஆனால் இந்த படமும் தோல்வியினை பெற்றதனை தொடர்ந்து உதயநிதி நடிப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற மாமன்னன் படத்தில் கலக்கி இருந்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு அனைவர் கவனத்தையும் ஈர்த்தது இதுவரையிலும் இல்லாத அளவிற்கு சீரியஸ் ஆன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு சினிமாவில் பிரபலமாக இருக்கும் வடிவேலுவுடன் இணைந்து காமெடி செய்து பிரபலமான நடிகர்கள் பலர் இருக்கின்றனர் அப்படி முக்கியமான ஒருவர் தான் தம்பி ராமையா. வடிவேலு சிங்கமுத்து கூட்டணி எப்படி ரசிகர்களை சிரிக்க வைத்ததோ அதேபோல் வடிவேலு, தம்பி ராமையா கூட்டணியும் அமைந்தது.

பல படங்களில் இவர்களுடைய காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது அப்படி முக்கியமாக ஆறு, சில்லுனு ஒரு காதல், பம்பரக் கண்ணாலே போன்ற படங்களில் இவர்கள் செய்த காமெடிகள் ரசிகர்களால் தற்பொழுது வரையிலும் மறக்க முடியாது. இந்த சூழ்நிலையில் திடீரென வடிவேலுடன் தம்பி ராமையா இணைந்து நடிப்பதை நிறுத்தினார்.

பொதுவாக வடிவேலு தனக்கு பிடிக்காதது போல் யாராவது நடந்து கொண்டால் அவரை உடனே ஒதுக்கி வைத்து விடுவார். மேலும் தன்னுடன் நடிக்கும் காமெடி நடிகர்கள் தன்னை தாண்டி சிறப்பாக நடித்து விடக்கூடாது, தன்னைத் தாண்டி போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கக் கூடிய ஒருவர் அப்படி ஓரளவிற்கு வளர்ந்து விட்டால் அந்த நடிகர்களை தனது அருகிலேயே சேர்க்க மாட்டார்.

அந்த வகையில் தம்பி ராமையா காமெடி நடிகர் மட்டுமல்ல அவர் கதை ஆசிரியர் மற்றும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அப்படி வடிவேலுவை வைத்து தம்பி ராமையா இயக்கிய படம் தான்  இந்திரலோகத்தில் நா. அழகப்பன். இந்த படத்தின் நீளம் கருதி வடிவேலு நடித்த சில காட்சிகளை தயாரிப்பாளர் நீக்க சொன்னார். ஆனால் இதில் வடிவேலுக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை ஆனாலும் தயாரிப்பாளர் சொன்னதனால் வடிவேலுவின் சில காட்சிகளை தம்பி ராமையா நீக்கினார்.

எனவே இதனால் கோபமடைந்த வடிவேலு தம்பி ராமையாவுடன் பேசுவதையும், நடிப்பதையும் நிறுத்திவிட்டார். இவ்வாறு வடிவேலு செய்ததைப் பற்றி கவலைப்படாத தம்பி ராமையா தொடர்ந்து குணசத்திர நடிகராக நடித்து அசத்தினார். அப்படி மைனா படத்தில் தேசிய விருதையும் பெற்றார் நான்கு வருடங்களாக வடிவேலு சினிமாவில் நடிக்காமல் இருந்த நேரத்தில் அவரை விடவும் தம்பி ராமையா நடித்து சினிமாவில் பிசியான நடிகராகவும், வெற்றி நடிகராகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார்.