உடல் எடை குறைந்து போய் எலும்பும் தோலுமாக நடிகர் வடிவேலு..! இணையத்தில் லீக்கான புகைப்படம் இதோ..!

vadivelu-1
vadivelu-1

தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் வடிவேலு. இவருடைய நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும்  மாபெரும் ஹிட் அடித்தது மட்டும் அல்லாமல் நல்ல வசூலையும் பெற்று தந்தது பொதுவாக இவருடைய காமெடியால் ஹிட்டடித்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் ஏராளமாக உள்ளன.

அந்தவகையில் காமெடியனாக திரை உலகில் வலம் வந்த நடிகர் வடிவேலு சமீபத்தில் கதாநாயகனாகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்து ஹிட்டடித்த திரைப்படம் தான் இருபத்தி மூன்றாம் புலிகேசி இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

அதன் பின்னர் மீண்டும் சிம்புதேவன் இயக்கத்தில் 24ம் புலிகேசி திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்து வந்தார் அப்போது  தயாரிப்பாளர் சங்கருக்கும் நடிகர் வடிவேலுக்கும் இடையே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டதன் காரணமாக வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டு அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் செய்துவிட்டார்கள்.

என்னதான் அவர் திரைப்படங்கள் நடிக்காவிட்டாலும் அவருடைய காமெடிகள் இன்றும் திரையில் ஜொலித்துக் கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் ஒவ்வொரு மீம்ஸ் கிரியேட்டர்ஸ் களுக்கும் வடிவேலுவின் காமெடிகள் தான் இன்று வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் வடிவேலு தற்சமயம் ஏதேனும் திரை படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெப் தொடர் பக்கம் அதிக ஆர்வம் காட்டி வரும் வடிவேலு சமீபத்தில் தன்னுடைய சக நடிகர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் நடிகர் வடிவேலு எலும்பும் தோலுமாக இருப்பதைப் பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

vadivelu-2
vadivelu-2