நடிகர் வடிவேலு சமீப பேட்டி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் பயோபிக் படத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான் நடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான போராட்டங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது.
இதன் மூலம் முதன்முறையாக தமிழக முதல்வர் பொறுப்பை மு.க.ஸ்டாலின் பெற்றார் எனவே இதற்கு பலரும் பாராட்டுகளை கூறியிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இவருடைய 70வது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் இவருடைய பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள்.
மேலும் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் எங்கள் முதல் எங்கள் பெருமை என்ற புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பலரும் கலந்துக் கொண்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் பார்வையிட்டார். மேலும் கமலஹாசன், ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து காமெடி நடிகர் யோகி பாபு ஆகியோர்கள் இணைந்து சமீபத்தில் பார்வையிட்டனர்.
மேலும் வடிவேலும் கண்காட்சியைப் பார்வையிட்ட நிலையில் அங்கு வடிவேலுவும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கண்காட்சியை பார்வையிட்ட வடிவேலு பிறகு செய்தி வாசிப்பாளர்களை சந்தித்து பேட்டி அளித்த நிலையில் அப்பொழுது அங்கு பார்த்த படம் எல்லாம் வெறும் படம் அல்ல, எல்லாம் உண்மை என் நெஞ்செல்லாம் நெகிழ்ச்சியாக இருக்கிறது, இது எல்லாம் மனிதர்களுக்கும் தைரியதையும், தன்னம்பிக்கை கொடுக்கும் புகைப்பட கண்காட்சியாக இருக்கிறது.
பல போராட்டங்களைக் கடந்த பின்னர் தான் இந்த இடத்திற்கு முதலமைச்சராகி இருக்கிறார் ஸ்டாலின் ஒரு கலைஞராக தான் புகைப்பட கண்காட்சியை பார்வையிட வந்திருந்தேன் நடிகராக வரவில்லை. அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலினுடைய வாழ்க்கை பயணம் குறித்த கதையில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும் ஆனால் உதயநிதி நடிக்க மாட்டேன் என்று கூறினார் இருந்தாலும் அவரை கட்டாயப்படுத்தி நடிக்க வைப்போம் என்று கூறியுள்ளார்.