காக்கி சட்டையில் கம்பீரமாக நடிகர் உதயநிதி ஸ்டாலின்..! இணையத்தில் லீக்கான ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படம்..!

udhayanithi-1
udhayanithi-1

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் உதயநிதி ஸ்டாலின் இவர் தற்சமயம் மிகப்பெரிய அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். என்ன தான் அரசியலில் அதிக கவனம் இருந்தாலும் திரைப்படங்களில் நடிப்பதை மட்டும் இவர் தவித்தது கிடையாது.

அந்தவகையில் தற்போது கூட இவருடைய கைவசம் கண்ணை நம்பாதே, ஏஞ்சல், நெஞ்சுக்கு நீதி, மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு திரைப்படம் என ஆக மொத்தம் நான்கு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் நடித்து வரும் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தை வலிமை திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள்தான் தயாரித்து வருகிறார் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது ஹிந்தி சினிமாவில் வெளியான ஆர்டிகள் 15 என்ற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமாகும்.  அதுமட்டுமில்லாமல் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் எப்படி ரசிகர்களின் மனதை தொட்டது அதேபோல இந்த திரைப்படமும் அமையும் என கூறுகிறார்கள்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு எதிராக நடக்கும் பல்வேறு கஷ்டங்களையும் வண்ணங்களையும் சுட்டிக்காட்டியது மட்டுமில்லாமல் ஜாதி பெயர்களையும் இந்த திரைப்படத்தின் மூலம் தெளிவாக காட்டி உள்ளார்கள்.

udhayanithi-1
udhayanithi-1

பொதுவாக ஏதேனும் ஒரு ஜாதி பெயரை திரைப்படத்தில் கூறிவிட்டாள் அதற்கு பல்வேறு போராட்டங்கள் உருவாவது வழக்கம் தான். நிலையில் இந்த திரைப்படத்தில் அப்பட்டமாக பல உண்மைகளை வெளிக் காட்டுவதன் மூலமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது.

udhayanithi-1
udhayanithi-1