நடிகர் உதயநிதி வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் நெஞ்சுக்கு நீதி இந்த படம் ஹிந்தியில் வெளியான ஆர்டிகல் 15 படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் நெஞ்சுக்கு நீதி படம் தமிழிலும் சிறப்பாக இருந்த காரணத்தினால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று நன்றாகவே வசூல் பேட்டை நடத்தியது இந்த படத்தை அருண் ராஜா காமராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் கைகோர்த்து தனியா ரவிச்சந்திரன், 6.1 அர்ஜுனன், ரமேஷ் திலக் , அஸ்வின் ராஜா, இளவரசு, சயாஜி ஷின்டே, மயில்சாமி ஜீவா ரவி சுரேஷ் சக்கரவர்த்தி, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் நடித்து இருந்தனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சூப்பரான சம்பவம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு குடிகார நண்பராக ரமேஷ் திலக் நடித்திருப்பார்.
இந்த படத்தில் அவருக்கு மனைவியாக கர்ப்பிணிப் பெண் கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார் அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல நடிகர் ரமேஷ் திலகத்தின் உண்மையான மனைவியாம். படப்பிடிப்பு தளத்தில் இருவரும் ஷூட்டிங் முடித்துவிட்டு தனியாக உட்கார்ந்து பேசுவது வழக்கம் அப்படி இவர்கள் ஒரு தடவை பேசிக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் உதயநிதி.

இருவரையும் பார்த்து ஷூட்டிங்கில் ஒன்றாக நடிக்கிறார்கள் பிறகு ஷூட்டிங் முடிந்ததும் தனியாக இருவரும் உட்கார்ந்து பேசுகிறார்கள் என ஒரு தப்பான கோணத்தில் நினைத்து விட்டாராம். விசாரிக்கும் போது தான் தெரிந்தது அவர்கள் இருவரும் உண்மையான புருஷன் பொண்டாட்டி என்று உடனே உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் போய் தான் நினைத்ததை எண்ணி மன்னிப்பு கேட்டுக் கொண்டாராம்.