70, 80 காலகட்டங்களில் தமிழ் சினிமாவை தன் வசப்படுத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சினிமாவில் எந்த ஒரு ரோல்லாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அதில் நடிப்பது சிவாஜிக்கு கை வந்த கலை அதனால்தான் இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியை ருசித்து இருக்கின்றன.
மேலும் அதிக ஹிட் படங்களை கொடுத்தவர் லிஸ்டில் முதன்மையானவராக இருக்கிறார் சிவாஜி கணேசன். அதிலும் ஒரு சில திரைப்படங்களில் இவரது நடிப்பிற்கு ஈடு இணை இல்லாமல் இருந்து வந்துள்ளது கட்டபொம்மன், பாசமலர், தில்லானா மோகனாம்பாள், முதல் மரியாதைபோன்ற படங்களில் வேறு யார் நடித்தாலும் இந்த அளவிற்கு ஒரு அசாதாரண நடிப்பை வெளிப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாஜியின் திரை உலக வாழ்க்கை பயணம் 1952 ஆரம்பிக்கப்பட்டு 1999 வரை சினிமாவில் நடித்து வந்தார். இவருடன் பயணித்த பல நடிகர்களுடனும் நடித்து உள்ளார் அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கம் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்ற நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.
திரை உலகில் எந்த கதாபாத்திரமும் ரோலாக இருந்தாலும் அதில் தனது நடிப்பை வெளிப்படுத்துவது சிவாஜியின் வழக்கம் அந்த வகையில் பெண் வேடம் அணிந்து படத்தில் நடித்துள்ளார் சிவாஜி. சினிமா உலகில் சிவாஜியை நீங்கள் பல்வேறு விதமான கெட்டப்பில் பார்த்திருப்பீர்கள் ஆனால் பெண் வேடத்தில் பார்த்ததுண்டா..
இதோ யாரும் பார்த்திராத பெண் வேடத்தில் இருக்கும் சிவாஜி அழகிய புகைப்படம்.
sivaji