சமீப காலங்களாக சினிமாவையும் தாண்டி பிசினஸிலும் மிகவும் ஆர்வமடையாராக திகழ்பவர் தான் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் சில திரைப்படங்கள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகிறது ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி இருந்த நிலையில் அதிலிருந்து திடீரென விலகினார்.
இந்நிலையில் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரலாற்று சம்பந்தமான காட்சிகள் இடம் பெற இருப்பதாகவும் அந்த காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
எனவே சூர்யா இந்த படத்திற்காக 13 வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க இருப்பதாகவும் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகி உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் வரலாற்று சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட இருக்கும் நிலையில் அதற்காக சூர்யா தற்போது வேற லெவலில் தயாராகி வருகிறார்.
சூர்யா ஒரு காலகட்டத்தில் மிகவும் பிட்டாக இருந்து வந்த நிலையில் அதன் பிறகு கொஞ்சம் குண்டாக மாறிவிட்டார் எனவே தற்பொழுது 1000 வருடத்திற்கு முந்தைய சரித்திர காட்சிகள் படப்பிடிப்பிற்காக தனது உடலை பிட்டாக வைக்க வேண்டும் என்பதற்காக மிகவும் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
எனவே சூர்யா 42 படத்திற்காக இவ்வளவு கடுமையாக உடற்பயிற்சி செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலம் இளமை சூர்யாவை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சூர்யாவிற்கு ஜோடியாக இந்த படத்தில் திரிஷா பதானி நடித்து வரும் நிலையில் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய நிஷா யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.
The Man of Hardwork and Dedication ❤️❤️❤️❤️ @Suriya_offl Anna ❤️❤️❤️#Suriya42 🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/p6ZtEv1A6N
— Studio Green (@StudioGreen2) February 11, 2023