பாலாவிடம் வசமாக மாட்டிக் கொண்ட நடிகர் சூர்யா..! கதையை நகர்த்த முடியாமல் தவிக்கும் படக்குழு..! என்ன நடக்குது தெரியுமா.?

surya
surya

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் 40 இருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இப்பொழுது கூட இவர் பாலாவுடன் மீண்டும் ஒரு முறை கைகோர்த்து வணங்கான் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். வணங்கான் படம் முழுக்க முழுக்க மீனவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தின் ஷுட்டிங் தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இந்த படப்பிடிப்பின் பொழுது இயக்குனர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. பின் பிரச்சினையோடு இருந்தால் படபிடிப்பு ஒழுங்காக நடத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டு இருவரும் சமாதானமாகி படத்தில் நடித்தனர்.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பு  பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நகர முடியாமல் தடுமாறி வருகிறது. காரணம் இயக்குனர் பாலா படத்தின் கதையை முழுவதுமாக நடிகருடன் சொல்லாமல் சூட்டிங் நடக்கும்போது தான் அந்த கதையை டெவலப் செய்வது வழக்கம் .

தற்போது இந்த படத்தின் கதையை அடுத்து எப்படி நகர்துவது என்பது பாலாவுக்கே தெரியாமல் குழம்பிப் போய் உள்ளாராம் ஒரு கட்டத்தில் ஏ எல் விஜய் மற்றும் மதன் கார்கே ஆகியோர்களை அழைத்து இந்த கதையின் விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம் எப்படி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது என்பது குறித்து பேசி வருகின்றனர்.

அதன் பிறகு தான் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கப்படும் என தெரிய வருகிறது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யா செம்ம அப்சட்டில் இருக்கிறாராம் காரணம் படத்தின் ஷூட்டிங் தொடங்கி இழுத்துக் கொண்டே போவதால் படத்தின் பட்ஜெட் அதிகரிக்கும் என தெரிய வருகிறது. இதனால் சூர்யா மனதிற்குள் செம்மையை வந்து சிக்கிட்டோமே எனக்கூறி புலம்பி வருகிறாராம்.