நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக அதிகம் சமூக அக்கறை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வெற்றி கண்டு மக்கள் மனதில் மென்மேலும் உயர்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த ஜெய் பீம், சூரரைப் போற்று ஆகிய இரண்டு திரைப்படங்களும் கதை அம்சம் சிறப்பாக இருந்ததால் இந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் சூரறை போற்று திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது பட்டியலிலும் இடம் பெற்றது மற்றும் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகராக சூர்யாவும் தேர்வாகினார். தற்போது சூர்யா இயக்குனர் பாலாவுடன் கைகோர்த்து வணங்கான் என்னும் படத்தில் நடித்து வருகிறார் மற்றும் சிறுத்தை சிவா உடன் இணைந்து அடுத்த படத்தின் பூஜையும் சமீபத்தில் நடத்தியுள்ளார்.
இது தவிர ஒரு சில இயக்குனர்களுடன் படம் நடிக்க கமிட் ஆகியுள்ள சூர்யா தற்போது வணங்கான் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் ஆகிய இரு படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். சினிமாவில் நடிப்பதை தவிர்த்து சூர்யா பல படங்களை தயாரித்தும் வருகிறார். ஆம் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து 2d என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றன.
அண்மையில் கூட சூர்யா அவரது தம்பி கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த விருமன் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இப்படி சினிமாவில் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் சூர்யா அகரம் அறக்கட்டளை என்ற நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் தமிழகத்தில் நன்கு படிக்கும் பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இது பல வருடங்களாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தமிழ்நாட்டை தாண்டி கேரளாவிற்கு அவரது உதவி சென்றடைகிறது. கேரளாவில் உள்ள ஒரு பெண்ணிற்கு சூர்யா படிப்பதற்காக மொபைல் வாங்கி கொடுத்துள்ளார். அந்தப் பெண் சூர்யா சார் தான் எனக்கு மொபைல் வாங்கி கொடுத்தார் என அவர் கூறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த மக்கள் மற்றும் சூர்யா ரசிகர்கள் சூர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#Suriya Helped a Girl in Kerala By Giving Her a New Phone For PSC Exam😎🔥
Not Only in TamilNadu He Extended Helps To Students in Kerala Too♥️pic.twitter.com/dKVx1AUz50
— Saloon Kada Shanmugam (@saloon_kada) August 22, 2022