நடிகர் சூர்யா தனது பயணத்தை தொடர்ந்தது நாளிலிருந்து இப்பொழுது சினிமா வரை சினிமா உலகில் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றி கண்டு வருகிறார். இவரது படங்கள் புதுமையாக இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பாராட்டை வாங்கியது மேலும் வசூலிலும் அடித்து நொறுக்கியது குறிப்பாக அண்மையில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா பாலாவுடன் ஒரு படம் பண்ணுகிறார் மேலும் வெற்றிமாறன் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலா – சூர்யா இணைந்து படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டு இருக்கிறது. சூர்யா இயக்குனர் பாலாவுக்கு தொடர்ந்து அழுத்ததை கொடுத்து வருகிறார்.
அதாவது இந்த திரைப்படத்தை குறைந்தது ஐந்து, ஆறு மாதங்களில் எடுத்து முடிக்க வேண்டுமென கட்டளைவிட்டுள்ளார். இந்தப் படம் முழுக்க முழுக்க மீனவர்கள் பிரச்சினையை எடுத்து இருக்கும் திரைப் படமாக இருக்கும் என கூறப்படுகிறது இந்த படம் கன்னியாகுமரி, தூத்துக்குடி அதன் சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகள் இருக்கக்கூடாது என சூர்யா பாலாவுக்கு கட்டளையிட்டுள்ளார் அதாவது இந்த படத்தில் வன்முறைகள் காட்சிகள் இடம் பெறக்கூடாது மற்றும் தவறான வார்த்தைகளும் இந்த படத்தில் இடம் பெறக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டுள்ளார் பாலவும் ஒப்புக்கொண்டுள்ளார் எனவே இந்த படம் சற்று வித்தியாசமாகவும் இருக்கும் என தெரிகிறது.