தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா சமீபத்தில் ஜெய்பீம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்தனை படம் வெளியாகி குறிப்பிட்ட சமுதாயத்தினரை கோவ படுத்தினாலும் பல தரப்பு மக்களைகவர்ந்து விட்டது.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு வெளியிடப்போவதாக படக்குழுவினர் கூறியிருந்தார்கள்
ஆனால் வருகின்ற பிப்ரவரி மாதம் நான்காம் தேதி திரைப்படம் வெளியாகும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக படக்குழுவினர்கள் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார்கள். அந்த வகையில் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை ஒரு மாதம் அளவு தள்ளி வைப்பதற்கு காரணம் என்ன என்று அனைவரும் யோசித்த நிலையில் அதற்கான விடை கிடைத்துள்ளது.
ஏனெனில் பொங்கல் தினத்தை தல அஜித்தின் வலிமை திரைப்படம் திரையில் வெளியாக உள்ளது பொதுவாக தல அஜித்தின் திரைப்படம் இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு படமும் வெளியாகாமல் இருந்துவரும் நிலையில் பொங்கல் தினத்தில் வெளியிட்டால் அது மாபெரும் வசூலை பெறும் என்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது மற்ற நடிகர்களின் திரைப்படங்கள் அனைத்துமே தேதி மாற்றம் செய்யப்பட்டு வெளியீட்டு தேதியை அறிவித்து வருகிறார்கள். அதில் எதற்கும் துணிந்தவன் என்ற சூர்யா திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சூர்யா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் செய்ததன் காரணமாக அஜித்தை பார்த்து பயந்து ஓடும் சூர்யா என அவர்களுடைய ரசிகர்கள் புது புரளியை கிளப்பி வருகிறார்கள்.