சமீபத்தில் நடிகர் சூர்யா ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் இத்திரைப்படம் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் பல பிரபலங்களிடம் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
அந்த வகையில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஆனது ஐஎம்டிபி இணையத்தில் ஒரு மிகப்பெரிய சாதனை படைத்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படம் உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது அந்தவகையில் சூரரைப்போற்று திரைப்படத்தைப் போலவே ஜெய்பீம் திரைப்படமும் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் சூர்யா பாண்டியராஜன் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் எடிட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா பாலா மற்றும் சிறுத்தை சிவா இயக்க உள்ள இரண்டு திரைப்படங்களில் நடிக்க உள்ளார் அந்த வகையில் பாலா இயக்கும் திரைப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் இந்த திரைப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 70களில் கனவு கன்னியாக வலம் வந்த ஹேமா மாலினி என்ன திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன இவர் இது சாத்தியம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து கமலுடன் ஹே ராம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை அரசியலிலும் ஈடுபட்டு பிரபல அரசியல் கட்சியில் எம்பி பதவியில் உள்ளார் இந்நிலையில் நடிகை ஹேமமாலினியை இயக்குனர் பாலா நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.
அந்தவகையில் இவர் இந்த திரைப்படத்திற்கு சம்மதித்தால் கண்டிப்பாக அவருடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருக்கும் இதனால் ரசிகர்கள் ஒருவேளை சூர்யா வயதான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என எதிர்பார்த்து வருகிறார்கள்.