நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்த வருகிறார். இவரை போலவே அவரது மனைவி ஜோதிகாவும் திருமணம் செய்து கொண்ட பிறகும் சினிமா உலகில் சோலோ படங்களிலும், முக்கிய நடிகரை படங்களிலும் நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் விரிவுபடுத்தி வருகிறார்.
சூர்யாவும், ஜோதிகாவும் 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் அதன்பின்னும் வெற்றியை நோக்கி சினிமாவில் பயணிப்பது வருகின்றனர். நடிகர் சூர்யா அண்மையில் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே பிளாக்பஸ்டர் படமாக மாறியுள்ளன சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் நல்லதொரு பெயரை பெற்றுக்கொடுத்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வாடிவாசல், எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களில் அடிக்க வருகிறார். அதில் முதலாவதாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா ஒருபக்கம் இப்படி இருக்க மறுபக்கம் ஜோதிகா கடைசியாக சசிகுமாருடன் கைகோர்த்து உடன்பிறப்பே மற்றும் பல்வேறு படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.
சினிமா உலகில் இப்படி ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் நடிகர் சூர்யா 2டி என்டர்டெய்ன்மெண்ட் பெயரில் பல்வேறு சிறப்பான படங்களை தயாரித்து வருகிறார் இதனால் தமிழ் சினிமாவில் சூர்யா, ஜோதிகா இருவருமே நன்றாகவே காசு காசு கொடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் தவிர்க்கமுடியாத ஒருவராக இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா அப்பொழுது முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மற்றும் இருவரும் ஒன்றாக சேர்ந்து பயணிப்பதுமாக இருந்து வருகின்றனர் அண்மையில் கூட மும்பையில் இவர்கள் இருவரும் காலையில் வாக்கிங் சென்றபோது எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை நீங்களே பாருங்கள்.