நடிகர் சூர்யா குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? மிரண்டுப் போன ரசிகர்கள்.!

surya
surya

நடிகர் சூர்யா சினிமா பயணத்தை தொடங்கிய நாளிலிருந்து இப்போதுவரையிலும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்களை மகிழ்விக்க அதிகமும் முயற்சித்து வருகிறார் இவர் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தாலும் போகப்போக ஆக்ஷன் படங்களில் நடிக்க தொடங்கினார்.

இப்பொழுது சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த படங்களும் வெற்றி கண்டிருக்கின்றன இவர் நடிப்பில் அண்மைகாலமாக வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த படங்களில் பெரிதும் சமூக அக்கரை உள்ள கருத்துக்கள் அதிகம் இடம்பெற்று இருந்தன.

எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா சிறந்த இயக்குனர்கள் என்ற அந்தஸ்தை வைத்திருக்கும் இயக்குனருடன் கைகோர்க்கிறார் ஒரு பக்கம் தேசிய விருது பெற்ற வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

அதற்கு முன்பாக இயக்குனர் பாலாவுடன் கைகோர்த்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் மீனவர்களை பற்றிய சில தகவல்களை எடுத்துரைக்கும் படமாக இருக்கும் என தெரியவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க் கொண்டே இருக்கிறது.

அண்மை காலமாக சினிமா உலகில் இருக்கும் நடிகர் நடிகைகள் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து நாம் பார்த்து வருகிறோம் அதுபோல இப்பொழுது நடிகர் சூர்யா குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்த சில தகவல்கள் வெளிவருகின்றன அதன்படி பார்க்கையில் நடிகர் சூர்யாவின் சொத்து மதிப்பு சுமார் 250 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.