நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர், தமிழகத்தில் இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது, தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி மாநிலங்களான கேரளாவிலும் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர், இதற்கெல்லாம் காரணம் இவருடைய மிகச் சிறப்பான நடிப்புதான்.
இவரது தந்தை நடிகர் சிவகுமாரும் மிகச்சிறந்த ஒரு நடிகர், இவரது தம்பி நடிகர் கார்த்தியும் மிகச்சிறந்த ஒரு நடிகர், மேலும் இவரது மனைவி நடிகை ஜோதிகாவும் மிகச் சிறந்த நடிகையாக வலம் வருகிறார். இப்படி காலம் காலமாக இவர்களது குடும்பம் முழுவதும் தமிழ் சினிமாவில் அழியா கால் தடத்தை பதித்துவருகிறது.
சமீபத்தில் இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த பல படங்கள் அதிக சர்ச்சைக்கு உள்ளாகியது, இப்படியெல்லாம் இருக்க தற்போது சூர்யா பாலாவின் இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார்,இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வருகின்றன, இந்த படத்தில் நடிகையாக சமீபத்தில் அதிகம் ட்ரெண்டான (Mamitha Baiju) நடித்து வருகிறார்.
மிகவும் இளம் வயதான இவர் தன்னுடைய அழகான எக்ஸ்பிரஷன்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர், இவருக்கு வயது 20 ஆகும்.இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் 12 வயதான சூர்யாவின் மகன் தேவ் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திரைப்படத்தில் நடிக்கப் போகிறாரா? இல்லை வேறு ஏதாவது விஷயங்களுக்காக இருக்குமா? என்று ஆர்வத்துடனும்,ஆச்சரியத்துடனும் குழம்பிய நிலையில் கேட்கிறார்கள். என்னதான் எளிதில் வாய்ப்பு கிடைத்தாலும் திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து இருக்க முடியும் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.