“விக்ரம்” படத்தில் நடித்தது குறித்து பதிவிட்ட நடிகர் சூர்யா – கொண்டாடும் ரசிகர்கள்.!

surya-kamal
surya-kamal

நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் தயங்காமல் நடிக்க கூடிய நடிகர்களில் ஒருவர் உலக நாயகன் கமலஹாசன் அப்படி ஒரு கதையை தான்  லோகேஷ் கனகராஜ் சொன்னார். அந்த கதை கமலுக்கு பிடித்துப்போகவே தேர்ந்தெடுத்து நடித்தார்.

படமும் நேற்று உலக அளவில் வெளியாகி சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.  விக்ரம் படத்தில் கமலுடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா நரேன், ஷிவானி நாராயணன் என மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தியது. ஒவ்வொருவருக்கும் சரியான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி உள்ளனர்.

இதனால் அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் இந்த படத்தை பார்த்துகொண்டாடி வருகின்றனர். விக்ரம் திரைப்படம் நிச்சயம் RRR, KGF 2 படங்களுக்கு இணையாக பேசப்பட்டு வருகிறது. விக்ரம் திரைப்படம் முதல் நாளில் மட்டுமே உலக அளவில் 66 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கடைசி பத்து நிமிடம் நடிகர் சூர்யா வந்து மிரட்டியிருப்பார். இதுகுறித்து சூர்யா தனது ட்விட்டர் பதிவில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார் அவர் என்ன சொல்லி உள்ளார் என்றால்  அன்புள்ள கமலஹாசன் அண்ணன். விக்ரம் படத்தில் உங்களுடன் நடித்ததன் மூலம் எனது கனவு நிறைவேறி உள்ளது.

இதை உருவாக்கிய தந்த இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என கூறிய அவர் உள்ளார் இச்செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ சூர்யா போட்ட அந்த பதிவை நீங்களே பாருங்கள்.