முன்னணி நடிகர் என்று கூட பார்க்காமல் சூர்யாவை பயங்கரமாக கலாய்த்த 37 வயது நடிகை… உங்களுக்கு அந்த தகுதிலாம் இல்லமா.. .

தற்போது சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று மத்திய அரசு சினிமாவிற்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனை தமிழ் சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் பலரும் இதற்காக எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.  அதோடு இதனைப் பற்றிய கருத்துக்களை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் பகிர்வதும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அதாவது மத்திய அரசு சினிமாவிற்கு கருத்து சுதந்திரம் இருக்கக் கூடாது என்று சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் எப்படி செயல்படும் ஆனால் ஒரு படம் தணிக்கையாக செயல்பட்டு வெளியான பிறகும் திரைப்படத்திற்கு அதிகளவில் புகார்கள் வந்தால் மீண்டும் தணிக்கையாக செயல்படும் சட்டம் தான் அது.

இதனை எதிர்த்து பல நடிகர் நடிகைகள் தங்களது சுய கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகரான சூர்யாவும் இது சினிமாவின் கருத்து சுதந்திரத்தை பரிக்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவை பார்த்துவிட்டு பாஜக கட்சியின் பிரதிநிதியான காயத்ரி ரகுமான் சூர்யாவை பங்கமாக கலாய்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சமீப காலங்களாக வெளிவரும் படங்களில் பெரிதளவில் கருத்துக்கள் எதுவும் இல்லை. அதுவும் உங்கள் படங்களில் சுத்தமாக இல்லை. நாலு சண்டை காட்சிகள், 4 பாடல் காட்சிகள், 2 மாஸ் ஓபனிங் காட்சிகள், 4 சென்டிமென்ட் சீன்கள் இதை தவிர சொல்லும் அளவிற்கு உங்கள் திரைப்படங்களில் என்ன உள்ளது.

இது போன்ற படங்களில் நடிப்பதற்கு உங்களுக்கு எதற்கு கருத்து சுதந்திரம் வேண்டும்? என கோபமாக இவர் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சில நடிகர் நடிகைகள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும் ரசிகர்கள் பெரும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.