பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருந்து வருகிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றதோடு மட்டுமல்லாமல் சூர்யா தொடர்ந்து நடித்து வந்த திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அமேசான் ஓடிடிவியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். சூர்யா சுதா கொங்கரா இவர்களின் கூட்டணி அருமையாக இருப்பதால் ரசிகர்கள் தொடர்ந்து மீண்டும் இவர்கள் எப்போது இணைவார்கள் என்று கேள்வி எழுப்பி வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது சூரரைப்போற்று திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. ஹிந்தியில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெணட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமான தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப பேட்டி ஒன்றில் இயக்குனர் சுதா கொங்கரா அளித்த பேட்டியில் இந்தியில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக கூறிவுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தில் சூர்யா நடித்த கேரக்டரில் பிரபல முன்னணி நடிகர் அக்ஷய்குமார் நடிக்க இருப்பதாகவும், இவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடிக்க விரும்புவதாகவும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் சூரரைப்போற்று திரைப்படத்திற்குப் பிறகு சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சுதா கொங்கரா இணைந்து மீண்டும் செயல்பட உள்ளார்கள். இவர்களைத் தொடர்ந்து மற்ற நடிகர் நடிகைகளை பற்றிய தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.