தனது அடுத்த படத்தில் சூர்யாவை நம்பினால் வேலைக்கு ஆகாது என புதிய நடிகரை கமிட் செய்த சிறுத்தை சிவா.!

surya 12
surya 12

தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருந்த வரும் இயக்குனர் தான் சிறுத்தை சிவா. இவர் சிறுத்தை,வீரம்,விவேகம், விசுவாசம் என ஏராளமான திரைப்படங்களை இயக்கி பிரபலமானார். இந்தவகையில் கடைசியாக இவர் ரஜினியை வைத்து அண்ணாத்த திரைப்படத்தினை இயக்கி இருந்தார்.

இத்திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்திருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தது இத்திரைப்படத்தில் தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்திருந்தார்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியானது.  இதனைத் தொடர்ந்து தற்போது புதிய தகவல் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது அதாவது சிறுத்தை சிவா கூறிய கதையை சூர்யாவுக்கு பல முறை மாற்ற சொல்லி இருக்கிறாராம்.

எனவே சிறுத்தை சிவா சூர்யாவை விட்டுவிட்டு அஜீத்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். எனவே விரைவில் அஜித்தை நேரில் சந்தித்து அவரிடம் கதை சொல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்பொழுது சூர்யா பாலா இயக்கத்தில் ஒரு படத்திலும், வாடிவாசல்,சுதா கொங்குரா இயக்கும் ஒரு படத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தற்குப் பிறகு சிறுத்தை சிவாவுக்கு கால்ஷீட் கொடுப்பார் என தெரிகின்றது.

எனவே சூர்யாவை கமிட் செய்தால் வேலைக்காகாது என்று நினைத்த இவர் அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.