கோட் சூட் போட்டுக் கொண்டு புதிய கெட்டப்பில் சூர்யா.! எந்த திரைப்படத்தின் கெட்டப் என குழம்பும் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா சமீப காலங்களாக இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறாத காரணத்தினால் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அடைந்தது.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் என்ஜிகே திரைப்படத்தை பார்த்துவிட்டு நீங்கள் சரியாக நடிக்கவில்லை என்று சூர்யாவிடம் கூற அதற்கு நான் இதற்கு மேல் நடிக்க கற்றுக் கொள்கிந்தார் சூர்யா.

இப்படிப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் சமீபத்தில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படம் இவருக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இழந்த மார்க்கெட்டை திரும்ப தர உதவியது.இப்படிப்பட்ட நிலையில் சூர்யா சில மாதங்களாக பெயரிடாத திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறாராம் ஓரளவிற்கு நல்ல கேரக்டர் தான். ஆனால் இத்திரைப்படத்தைப் பற்றிய பெரிதாக தகவல் வெளி வரவில்லை. எனவே சூர்யா சர்ப்ரைசாக வெளி விடலாம் என்று நினைத்திருந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென்று இத்திரைப்படத்தில் அவருடைய கேரக்டரில் எப்படி இருப்பார் என்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் கேரக்டரில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தை சூர்யாவின் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அதோடு இத்திரைப்படம் சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது சூர்யா இரண்டு வருடங்களில் மூன்று திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம்.