தற்பொழுது உள்ள பல சினிமா நடிகைகள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பல திரைப்படங்களில் கமிட்டாகி நடிக்கிறார்கள் ஆனால் அவர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்க முடியவில்லை என்னதான் சினிமாவில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வந்தாலும் அவர்களது நடிப்பு சரியாக இல்லை என்பதால் ரசிகர்கள் பலரும் பல நடிகைகளை வெறுத்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.
மேலும் ஒரு சில நடிகைகள் சின்னஞ்சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்து பின்பு பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் உடனே நான் படிக்கப் போகிறேன் என்று கூறுகிறார்கள் அதேபோல்தான் பிரபல நடிகையாக பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்து தற்பொழுது பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்கள்.அந்த வகையில் வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ருதிகா இவர் தேங்காய் சீனிவாசன் பேத்தி என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார்.சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார்.
அந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து இவருக்கு ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பின்பு படவாய்ப்பு இல்லாத காரணத்தினால் நான் படிக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு சினிமாவை விட்டு விலகி விட்டார் இவர் 14 வயதிலேயே சூர்யாவிற்கு ஜோடியாக ஸ்ரீ திரைப்படத்தில் நடித்தபோது இவர் சினிமாவில் மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார்.
தற்பொழுது அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு பேட்டி கொடுத்தபோது நடிகர் சூர்யாவை பற்றி கூறியுள்ளார் அதில் சூர்யா சார் தப்பு செய்துவிட்டார் என கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அதாவது ஸ்ரீ திரைப்படத்தில் நடித்த பொழுது இவரைப் பார்த்து சூர்யா பள்ளிக்கூடம் சரியாக போகிறீர்களா என அக்கறையுடன் கேட்பாராம் ஆனால் சூர்யா இந்த நடிகையுடன் நடித்ததால் அவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் தோல்வியை சந்தித்துக் கொண்டே போனதாம் ஸ்ரீ திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்த பல திரைப்படங்கள் இவருக்கு தோல்வி தந்துள்ள தாம்.
என்னைப் பற்றி இவ்வளவு அக்கறையாக கேட்ட அவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் தோல்வி தந்தது எனக்கு மன வருத்தமாக போய்விட்டது என இவர் கூரியதாக தகவல் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.