actor surya liked these three movie:தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூர்யா இவர் தற்பொழுது நவரசா என்ற வெப்சீரிஸில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்ததாக இவர் நிறைய திரைப்படங்கள் நடிக்க உள்ளார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படமும் நடிக்கவுள்ளார் சூர்யா.
இந்த எல்லா திரைப்படத்திற்கும் முன்பு இவர் நடித்திருந்த சூரரைப்போற்று என்ற திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. வெளியான நாளில் இருந்தே தற்போது வரை இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சூர்யா எனக்கு பிடித்த மூன்று படம் இதுதான் என குறிப்பிட்டு கூறியுள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் மற்றும் அபூர்வ சகோதரர்கள், விக்ரம் நடிப்பில் வெளியான சேது என இந்த மூன்று திரைப்படங்களும் மிகவும் பிடித்த திரைப்படமாக அமைகிறது என்று கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த தகவல் சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் பல ரசிகர்கள் இந்த தகவலை ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.