தளபதி விஜயுடன் தனிப்பட்ட சந்திப்பில் நடிகர் சூர்யா..! அப்படி என்னதான் பேசிக்கிட்டாங்க கசிந்தது உண்மை..!

vijay-surya
vijay-surya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் விஜய். இவர்கள் இருவருமே தமிழ் சினிமாவில் சாதித்த நடிகர்கள் என்று கூட சொல்லலாம். அந்தவகையில் இவர்களுடைய ரசிகர் கூட்டத்திற்கு பஞ்சமிருக்காது

இவ்வாறு பிரபலமான இந்த இரண்டு கதாநாயகர்களும் சிறுவயதிலிருந்தே சிறந்த நண்பர்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சமீபத்தில் விஜய் மற்றும் சூர்யா சந்தித்தது குறித்து பல்வேறு விதமாக சமூக வலைதளப் பக்கத்தில் பேசப்பட்டது.

ஆனால் இவர்கள் இருவரும் சந்தித்தது ஏனென்றால் இவர்களுடைய இருவரின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடந்து கொண்டிருந்தது அந்த வகையில் எதார்த்தமான ஒரு சந்திப்பில் இருவரும் சந்தித்துள்ளார்கள் இதனால்  விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

அந்தவகையில் இந்த சந்திப்பின் மூலமாக ஒரு சுவாரசியமான தகவல்களும் வெளியேறி உள்ளதாக சமூக வலைதளப் பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் தளபதிவிஜய் சூர்யாவிடம் ஜெய்பீம் திரைப்படம் பற்றி பேசியதாக தெரியவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் பேசிக் கொண்டது மட்டுமின்றி மதிய உணவை இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணதாக கூறப்படுகிறது மேலும் இவர்கள் சந்தித்தது தனிப்பட்ட சந்திப்பு என்பதன் காரணமாக புகைப்படம் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.

என்னதான் புகைப்படம் வெளி வராவிட்டாலும் ரசிகர்கள் இவர்கள் சந்தித்த பழைய புகைப்படத்தை  இணையத்தில் பதிவேற்றம் செய்து அதனை வைரலாக்கி வருகிறார்கள். இவர்கள் சேர்ந்தது போல அவருடைய ரசிகர்களும் இணைந்தால் அனைவருக்கும் சந்தோஷம்தான்.