பல குடும்பங்களை வாழவைத்த சூர்யா!! எவ்வளவு கொடுத்துள்ளார் தெரியுமா? குவியும் பாராட்டுகள்..

surya and karthik 2

கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கொரோனா என்ற பெரும் தோற்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். உயிருடன் இருப்பவர்களும் அடுத்தநாள் இருப்போமா இருக்க மாட்டோமா என்ற சிந்தனையுடன் இருந்து வருகிறோம். அதோடு நமக்குள்ள உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மிகவும் வருத்தமான ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதனால் பலரும் மன அழுத்தத்தில் இருந்து வருகிறார்கள். ஒரு பக்கம் கொரோனா அனைவரையும் கொன்று வர இன்னும் ஒருபக்கம் பசியும் பட்டினியும் ஏழை மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. எனவே ஏழைகளுக்கு தமிழகம் அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது.

இதன் காரணமாக தொடர்ந்து அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னணி நடிகரான  சூரியா கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் வேலையில்லாமல் திண்டாடி வரும் 250 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளாராம்.

அதாவது நடிகர் சூர்யா நடிகர் சங்கத்திலுள்ள 250 குடும்பங்களுக்கு தலா 5,000 கொடுத்துள்ளார். அந்தவகையில் கிட்டத்தட்ட 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார். இதனைத்தொடர்ந்து முதலமைச்சரை சூர்யாவின் குடும்பத்தினர்கள் அகரம் பவுண்டேஷன் மூலம்  நேரில் சந்தித்து கொரோனா நிதி உதவி வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

surya 5
surya 5

இதனை அறிந்த திரை பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் சூர்யாவின் குடும்பத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதோடு தற்பொழுது இந்த தகவல் தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.