தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி பகத் பாசில் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து இருப்பது மட்டுமில்லாமல் சூர்யா நடிப்பது மிகவும் ரசிகர்களை உற்சாக படுத்தி உள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது தான் மேடம் இந்த திரைப்படத்தினை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரித்து உள்ளார் மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி திரையரங்கில் ரிலீசாக உள்ளது.
மேலும் தற்போது விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு பல ஹீரோக்களிடம் கால்சீட் வாங்குவது மட்டுமில்லாமல் தற்போது படம் தயாரிப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறாராம் அந்த வகையில் சமீபத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களையும் முடிவு செய்துள்ளாராம்.
முதலில் விஜய்யிடம் கால்சீட் கேட்டபோது அவர் 2 திரை படத்தில் பிசியாக இருப்பதன் காரணமாக அதன் பிறகு கமலுடன் இணைகிறார் என்பது தெரியவந்துள்ளது அதேபோல சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் வரலாற்று கதையம்சம் உள்ள படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் அவற்றை கமல்தான் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா அவர்கள் விக்ரம் திரைப்படத்தில் நடித்தபோது கமலுடன் ஏற்பட்ட பழக்கத்தினால் தற்போது கமலை விருந்துக்கு அழைத்து உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த விருந்துக்கு கமலும் செல்ல சம்மதித்துள்ளாராம் பொதுவாக கமல் எந்த ஒரு விஷயத்தையும் திட்டமிடாமல் செய்யமாட்டார் அந்த வகையில் அடுத்ததாக சூர்யா திரைப்படத்தை தயாரிக்க பக்கா பிளான் போடுகிறார் என்பது தெரிகிறது.