தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் சூர்யா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா தனது நாற்பதாவது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முன்பே தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் கொரோனா பிரச்சனையினால் சூர்யா ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தை கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை இயக்கி இருந்த பாண்டியராஜ் தற்போது சூர்யாவின் 40வது திரைப்படத்தையும் இயக்க உள்ளாராம். ஏனென்றால் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் சூர்யா தான் இயக்கி இருந்தார். அந்த வகையில் சூர்யாவுடன் இணைந்து பாண்டியராஜ் இயக்கியிருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் சூர்யாவின் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் சூட்டிங் சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு சூர்யா துப்பாக்கி வைத்திருப்பது போல போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது கத்தியுடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது. எனவே இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனுஷ் படமான கர்ணன் திரைப்படத்தை போல் இருக்குமோ என்று கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதால் மிகவும் உற்சாகமாக நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.