இந்த ஒரே ஒரு காரணத்தால் தான் கஜினி திரைப்படத்தில் நடித்தேன். நடிகர் சூர்யா அதிர்ச்சி தகவல்

ghajini
ghajini

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியாகிய திரைபடம் தான் கஜினி, இந்த திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்தார்.

கஜினி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று ஹிட்டானது, இந்த திரைப்படம் தமிழில் மரண ஹிட் அடித்ததால் ஹிந்தியில் ரீமேக் செய்தார்கள், இந்த நிலையில் சூர்யா நடிப்பதை தாண்டி படத்தை தயாரிப்பதையும் தொடர்ந்து வருகிறார், அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள் இந்த திரைப் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிக்காக லைவாக சூர்யா வந்துள்ளார்.

அப்பொழுது ரசிகர் ஒருவர் கஜினி திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை கூறுமாறு கேட்டுள்ளார், இதற்கு பதிலளித்த சூர்யா அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலான கதாபாத்திரம், அந்த கதாபாத்திரம் யோசிக்க வைக்கும் திறனை கொடுத்ததால் அந்த ஸ்கிரிப்ட்டை நான் தேர்ந்தெடுத்தேன்.

அதுமட்டுமில்லாமல் அந்த கதாபாத்திரத்திற்காக தலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் நடைமுறையை தெரிந்து கொண்ட பிறகுதான் நான் நடிக்க ஆரம்பித்தேன், இந்த திரைப்படத்தில் நடித்தபோது எங்களுக்கு தெரியாது படம் இந்தளவு பெரிய வெற்றியடையும் என்று இவ்வாறு அந்த லைவ்வில் பேசியுள்ளார் சூர்யா.