Actor Surya: சூர்யா நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக கங்குவா திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் தொடர்ந்து சில சுவாரசியமான தகவல்கள் வெளியாகி வருகிறது.
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் தயாராகி வரும் நிலையில் பிளாஷ்பேக் காட்சிகள் கொடைக்கானல் மற்றும் ராஜ முந்திரி காடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் படப்பிடிப்பு சாதனங்களை கொண்டு செல்ல பட குழுவினர்கள் நடந்தே சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து பிளாஷ்பேக் காட்சிகளுக்காக சூர்யா இரண்டு மணி நேரம் மேக்கப் போட்டுக் கொண்டாராம் சூர்யாவை தவிர மற்ற கலைஞர்களும் மேக்கப் போடுவதற்கு அதிக நேரம் ஆவதாக கூறப்படுகிறது. பிளாஷ்பேக் காட்சிகளை அடுத்து தற்கால காட்சிகள் கோவா, எண்ணூர் மற்றும் சென்னை உள்ளிட்ட தனியார் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படப்பிடிப்பில் சூர்யா மற்றும் திஷா பதானி காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். பல கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சூர்யாவின் கங்குவா படம் தெலுங்கு நடிகர்களின் படங்கள் போலவே 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது சமீப காலங்களாக தெலுங்கில் வெளியாகும் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி பாகுபலி, கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இவ்வாறு இந்த படங்களில் பணிபுரிந்த கேமரா டீம் தான் கங்குவா படத்திலும் பணியாற்றி வருகிறார்கள். அப்படி இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வருகின்ற நவம்பர் மாதம் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்ட போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளும் நிறைவடைந்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.