இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு நன்றி கூறி நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்த நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் வெற்றியினை கண்டார்.
இந்த படத்தில் இவருடைய சிறந்த நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது. மேலும் இவருக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்த நிலையில் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் இவர்களுடைய நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. மேலும் நடிகர் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.
இவ்வாறு தற்பொழுது இவர் வாடிவாசல், வணங்கான், சூர்யா 42 படங்களை நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் இவருக்கு நேற்று சூரறை போற்று திரைப்படத்தில் சிறப்பாக எதற்காக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாக பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
மேலும் இந்த படத்தினை சூர்யாவின் டூட்டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நடிகை ஜோதிகாவுக்கும் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா, சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த நாயகி அபர்ணா பாலா முரளி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர்களுக்கு நேற்று தேசிய விருது வழங்கப்பட்டது.
இது குறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாக திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் சூரரைப் போற்றி பட குழுவினர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில் தேசிய விருது வாங்கிய சூர்யா இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தனது பக்கத்தில் சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். எனவே நடிகர் சூர்யா ஏ ஆர் ரகுமான் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Sir… Thank you!!! https://t.co/pmLZfEtpcA
— Suriya Sivakumar (@Suriya_offl) October 1, 2022