துல்கர் சல்மான் பட இயக்குனருடன் இணைந்த நடிகர் சூர்யா.! வெளிவந்த மாஸ் அப்டேட்..

surya
surya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் சூர்யா தற்போது தன்னுடைய 42வது திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்திற்கு ‘சூரியா 42’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கி வரும் நிலையில் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

மேலும் சூர்யா இந்த படத்தில் கிட்டத்தட்ட 13 கெட்டப்பில் நடித்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக துல்கர் சல்மான் திரைப்பட இயக்குனருடன் சூர்யா கைக்கோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூரியன் 42 திரைப்படத்தில் மிருணாள் தாகூர், திஷா பதானி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் இணைவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வந்தனர்.

ஏனென்றால் வாடிவாசல் திரைப்படத்திற்காக சூர்யா இரண்டு காளைகளும் வாங்கி இருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்களும் வெளியானது. இப்படிப்பட்ட நிலையில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருவதனாலும், வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை திரைப்படத்தினை இயக்கி வந்ததாலும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

எனவே இருவரும் இந்த பட பணிகளை முடித்துவிட்டு இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென சூர்யா பிரபல இயக்குனர் ஒருவரின் திரைப்படத்தில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் சீதா ராமம்.

இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த இவருக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இந்த படத்தினை ஹனு ரகவபுடி இயக்கியிருந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தினையும் இவர்தான் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.