தில்லு இருந்தா.. அஜித் – விஜய் கிட்ட போய் கேளுங்க.. பத்திரிக்கையாளர்களிடம் கோபப்பட்ட நடிகர் சூர்யா.! இதுதான் காரணமா..

surya
surya

சினிமா உலகில் இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆசை நம்பர் ஒன் இடத்தை  எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்பதுதான். தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது இடத்தை பிடிக்க தற்போது அஜித் விஜய் போன்றவர்கள் தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படத்தைக் கொடுத்து அசத்தி வருகின்றனர்.

அஜித் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதுபோல விஜயும் பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் அதிரடியாக நடித்து வருகிறார். ரஜினியின் இடத்தைப் பிடிக்க அஜித் விஜயை தாண்டி சூர்யாவும் அந்த ரேஸில் இருக்கிறார்.

தமிழ்நாட்டில் அஜித் விஜய்க்கு இணையாக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை சூர்யாவும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவரும் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இதுவரை நடித்த கஜினி, ஜில்லுனு ஒரு காதல், வேல், வாரணம் ஆயிரம், சிங்கம், அயன், ஆதவன் என பல படங்கள் வெற்றி படங்கள் தான்.

இவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க அஜித் விஜய் உடன் சேர்ந்து இவரும் மோதிக் கொண்டு இருக்கிறார். இப்படி இருந்தாலும் முன்னணி நட்சத்திரங்கள் என்றால் பத்திரிக்கையாளர்கள் தொடங்கி சினிமா ரசிகர்கள் வரை முதலில் சொல்வது ரஜினி, அஜித், விஜய்க்கு பிறகுதான்  சூர்யாவை சொல்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி அஜித் விஜய் போன்றவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டார்கள். நேரில் பார்த்தால் கூட பத்திரிக்கையாளர்கள் கூட ஒன்னும் பேசாமல் இருப்பார்கள் மற்ற நடிகர்களை பார்த்து விட்டால் கேள்வி கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் அண்மையில் நடிகர் சூர்யாவை பார்த்து ஒரு முன்னணி பத்திரிகையாளர் பேட்டி கொடுக்க முடியுமா என கேட்டுள்ளார் உடனே கோபமடைந்த சூர்யா அஜித் விஜய்னா அமைதி ஆயிடுறீங்க எங்களிடம் மட்டும் உங்க வேலையை காட்டுறீங்க எனக்கூறி கொந்தளித்துள்ளாராம். இதனை வலைவீச்சு நண்பர் ஒரு வீடியோவில் பேசினார்.