Actor Vikram: நடிகர் விக்ரம் இயக்குனர் அமீரை கடந்த மூன்று வருடங்களாக காக்க வைத்ததாக கூறப்படுகிறது. பாலாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்த அமீர் திரிஷா – சூர்யா இணைந்து நடித்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றினை பெற்றது.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் ஆனால் இவருடைய படங்களை இயக்க எந்த இயக்குனரும் முன் வரவில்லை. மேலும் அமீருடைய கதையின் மீது எந்த தயாரிப்பாளரும் நம்பிக்கை வைக்காததால் தன்னுடைய படத்தை தானே தயாரிக்க தொடங்கினார்.
இந்த சூழலில் பெரிதாக படங்கள் வெற்றி பெறாததால் கடன் நெருக்கடி ஏற்பட்டது. மேலும் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தினை இயக்கினார் இதுதான் கார்த்தியின் முதல் படமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பருத்திவீரன் படத்திற்கு பிறகு அமீருடைய படங்கள் பெரிதாக வெற்றி பெறாத காரணத்தினால் நடிப்பதை தொடர்ந்தார்.
பிறகு மாயவலை என்ற படத்தையும் தயாரித்தார் இந்நிலையில் அமீர் சேது படத்தின் போது விக்ரமுக்கும் அமீருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து தான் முதல் படத்தை இயக்கும் பொழுது விக்ரமை ஹீரோவாக்கலாம் என்ற முடிவில் இருந்தாராம். அதன்படி மௌனம் பேசியதே படத்தின் கதையை விக்ரமிடம் தான் முதலில் சொல்லி உள்ளார்.
த்ரிஷாவுக்கு முதல் வாய்ப்பை கொடுத்த அமீர்.! மௌனம் பேசியதே முதல் படம் இல்லையாம்.. முழு விவரம் இதோ
ஆனால் அந்த கதை மீது நம்பிக்கை இல்லாததால் விக்ரம் ஒத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார். எனவே மூன்று வருடங்கள் விக்ரமின் பதிலுக்காக அமீர் காத்து வந்துள்ளார். இந்த சூழலில் அமீர் நந்தா படத்தில் சூர்யாவுடன் பணியாற்றிய பொழுது இவர்களுக்கு இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே இதனை பயன்படுத்திக்கொண்டு சூர்யாவிடம் மௌனம் பேசியதே படத்தின் கதையை கூறி பிறகு சூர்யாவையே இந்த படத்திலும் நடிக்க வைத்துள்ளார்.