மருந்து கூட வாங்க காசு இல்லாமல் கதறி அழுத பிதாமகன் தயாரிப்பாளருக்கு நடிகர் சூர்யா உடனே பணம் கொடுத்து உதவி செய்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் எவர் கிரீன் மூவி இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து பிரபலமானவர்தான் விஏ துரை.
பல படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்து வந்த விஏ துரை பிரபல முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்களை தயாரித்து உள்ளார். அந்த வகையில் சத்தியராஜின் என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, சூர்யாவின் பிதாமகன், விஜயகாந்த் கஜேந்திரா, நாய்க்குட்டி, காகித கப்பல் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மிக முக்கியமாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற பாபா படத்தையும் ஏவி துரை தான் தயாரித்தார். மேலும் ஏ வி துரை தயாரிப்பில் பாலா இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இவர்களை தொடர்ந்து ஒரு குத்துப் பாடலுக்கு நடிகை சிம்ரன் நடனமாடியிருந்தார் எனவே இவ்வாறு வெற்றி பெற்ற பிதாமகன் படத்திற்கு தேசிய விருது, தமிழக அரசின் விருது, பின் பேர் விருது என பல விருதுகளை குவித்தது இவ்வாறு இந்த படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக விளங்கியது.
இப்படிப்பட்ட நிலையில் விஏ துறை சற்று முன்பு உடல்நிலை சரியில்லை எனக் கூறி வெளியிட்டு இருந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு கால்களில் புண் ஏற்பட்டு எலும்புகள் தெரியும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். மேலும் நடக்க முடியாமல் தன்னை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாமல், மருந்து கூட வாங்க காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில் பிறகு சாலிகிராமத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருப்பதாகவும் கூறினார்.
இவ்வாறு இவருடைய வீடியோ சோசியல் வைரலாக அனைவரையும் கண்கலங்க வைத்தது இப்படிப்பட்ட நிலையில் சூர்யா முதற்கட்ட உதவியாக மருத்துவ செலவிற்காக 2 லட்சம் ரூபாய் பண உதவி செய்துள்ளார் இவ்வாறு இதனை கேட்டு ரசிகர்கள் சூர்யாவை பாராட்டி வருகிறார்கள். சூர்யாவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் பிதாமகன் என கூறலாம்.