நடிகர் சூர்யா மற்றும் விஜய் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படத்தை யாராவது பார்த்துள்ளீர்களா.! இணையதளத்தில் பட்டையைக்கிளப்பும் புகைப்படம்

suriya vijay-tamil360newz
suriya vijay-tamil360newz

நடிகர் விஜய் மற்றும் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர்கள் இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், இவர்கள் இருவரும் ஒன்றாக நேருக்குநேர் படத்திலும், பிரண்ட்ஸ் திரைப்படத்திலும் நடித்துள்ளார்கள்.

இந்த இரண்டு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, தற்பொழுது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதேபோல் சூர்யாவும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த இரண்டு திரைப்படமும் ஊரடங்கு காரணமாக இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.

அதே போல் இந்த இரண்டு திரைப்படமும் திரையரங்கில் தான் ஒளிபரப்பப்படும் என இருவரும் கூறியுள்ளார்கள், இந்தநிலையில் 1997 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து நடித்த நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் சூர்யா கதாநாயகனாக அறிமுகமானார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் அவர்கள் அப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது இதொ அந்த புகைப்படம்.