இந்த மாதிரி பண்ணிக்கிட்டு இருந்தீன்னா முடிச்சி போயிடும் – அதிதி ஷங்கருக்கு ஷாக் கொடுத்த நடிகர் சூரி.!

soori
soori

நடிகர் கார்த்தி தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி கையில் தற்போது பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய மூன்று திரைப்படங்கள் இருக்கின்றன இந்த படங்கள் அனைத்துமே அடுத்தடுத்து ஒவ்வொன்றாக ரிலீசாக இருக்கிறது.

முதலாவதாக முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் திரைப்படம் வருகின்ற 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும் சூரி, சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், மனோஜ், சிங்கம் புலி மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் போன்றவை வெளியாகி பெரிய அளவில் ரீச் ஆனது அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் இசை வெளியீட்டு விழா போன்றவை அண்மையில் அரங்கேறியது.

படம் வெளிவர இன்னும் சில தினங்களே இருப்பதால் விருமன் படக்குழு தொடர்ந்து ப்ரொமோஷன் வேலைகளை வெகு விறுவிறுப்பாக செய்து வருகிறது. அண்மையில் மலேசியா சென்றது அதனை தொடர்ந்து செய்தியாளர்களை பட குழு சந்தித்து படம் குறித்தும் பேசியது அப்போது நடிகை அதிதி சங்கர் சினிமா குறித்து தனது கதாபாத்திரம் குறித்து பேசினார் அவரை தொடர்ந்து காமெடி நடிகர் சூரி அதிதி சங்கரை பற்றி பேசினார்.

அந்தப் பொண்ணு எப்பொழுதுமே ஷூட்டிங் ஸ்பாட்டில் துருதுருவென இருக்கும் ஜோக் என்ற பெயரில் எங்கள் எல்லோரையும் சாவடிக்கும். படபிடிப்பு தளத்தில் ஒரு தடவை நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது தொடர்ந்து எட்டு வாட்டர் கேனை தூக்கி என் மேலே அடித்தார். அதை நிப்பாட்டுவதற்காக நான் அவரிடம் இனி அடிச்சா நான் செத்துடுவேன் என கூறினேன் பிறகுதான் அவர் நிப்பாட்டினார். அதிதி சங்கரிடம் திறமை நிறைய இருக்கு அவர் பெரிய ஆளாக வருவார் என கூறி முடித்தார்.