தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக கலக்கி வரும் அஜித் நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ஆசை படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது இந்த படம் தான். இப்படிப்பட்ட நிலையில் ஆசை படத்தில் அஜித்துக்கு டப்பிங் கொடுத்தவர் பிரபல நடிகர் ஆவார் மேலும் அவர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளிவந்த நிலையில் இந்த படத்தில் மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் இதை தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இதனை அடுத்து தற்போது இவர் தன்னுடைய 62வது திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் வசந்த இயக்கத்தில் அஜித், சுபலட்சுமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலருடைய கூட்டணியில் வெளிவந்த படம் தான் ஆசை இந்த படத்தில் அஜித் தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசை திரைப்படம் வெளிவந்ததற்குப் பிறகு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான அஜித் ரசிகர்களால் ‘ஆசை நாயகன் அஜித்’ என கொண்டாடப்பட்டார். இந்த படத்தில் தேவா இசையமைத்திருந்த நிலையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் அஜித் நானே டப்பிங் செய்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் அவருக்கு அது செட்டாகாத காரணத்தினால் பிரபல நடிகர் சுரேஷை டப்பிங் கொடுக்க கூறியுள்ளார்.
இது அல்டிமேட்டாக இருந்ததால் பிறகு சுரேஷையே ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த வகையில் 20 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக்ப ஸ்டர் ஹிட் பெற்றுள்ளது ஆசை படம். சுரேஷ் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது அஜித் மற்றும் சுரேஷ் இருவரும் இணைந்து கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த அசல் திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.