தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்டு தனது ஸ்டைலால் ட்ரசிகர்களை கவர்ந்தவர் ரஜினிகாந்த். இவரின் வளர்ச்சியைப் பார்க்க முடியாமல் இவருக்கு போட்டியாக இருந்த நடிகர்கள் இவருக்கு முட்டுக்கட்டையாக இருந்தனர்.
மேலும் இவருக்கு இருந்த சில தீய பழக்கங்கள் பற்றி அனைவருக்குமே தெரியும். இவரின் கடின உழைப்பு காரணமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் மன அழுத்தத்தினால் பலமுறை மயக்கம் அடைந்தார்.
ஆனால் அப்போது இருந்தவர்கள் பலரும் இவருக்கு மனநோய் என ஒரு வதந்தியை கிளப்பி விட்டனர். இந்நிலையில் அப்போது முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரீபிரியா அவர்கள் இவருக்கு ஆறுதலாக இருந்து உள்ளார்.
பின்பு இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்கள் ரஜினிகாந்திடம் உனக்கு மனநோய் என பலரும் சொல்கின்றனர். மேலும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள் எனக் கூறியதால் ரஜினியும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.
அப்போது இருந்த இரண்டு முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் வளர்ச்சிக்குபெரிய அளவில் முட்டுக்கட்டையாக இருந்து உள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்திக் கொள்ளாமல் ரஜினிகாந்த் அவரது படங்களில் கவனம் செலுத்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று முதல் இடத்தை பிடித்தார்.