சினிமா நடிகையை ஓரம் கட்டும் அளவிற்கு இருக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி.! கொள்ள அழகு போங்க.

srikanth

ஒரு காலகட்டத்தில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் ஸ்ரீகாந்த். இவர் 2002 ஆம் ஆண்டு ரோஜாக்கட்டம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமா உலகில் உள்ள அனைத்து பெண்களையும் மற்றும் குடும்பங்களையும் வெகுவாக கவர்ந்தார் ஸ்ரீகாந்த்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் காதல் மற்றும் குடும்ப சப்ஜெக்ட் ஆனா படங்களை எடுத்து நடித்து வந்தார் அந்த வகையில் இவர் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, வர்ணஜாலம், பம்பரக் கண்ணாலே, ஒரு நாள் கனவு,உயிர், கிழக்கு கடற்கரை சாலை போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இருந்தாலும் இவருக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற முடியாமல் சினிமா உலகில் போராடி வருகிறார்.

இப்படி தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் தமிழ் சினிமாவில் மட்டும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தாமல் பிற மொழிகளான தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் நடித்து நடித்து வருகிறார். இவருக்கு ஆரம்பத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது இருந்திருந்தால் அஜித்,விஜய் அவர்களுக்கு ஈடு இணையாக இருந்திருப்பார் ஆனால் சரியான வெற்றி படங்களை கொடுக்காததால் தற்போது அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போயுள்ளார்.

இருப்பினும் தனது விடா முயற்சியின் மூலம் சினிமாவில் நடித்து கொண்டு வலம் வருகிறார்.இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக நம்பியார், சவுகார்பேட்டை ஆகிய படங்களில் நடித்தார். இருப்பினும் இத்திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இதனையடுத்து தற்போது அவர் சிம்பு ஹன்சிகா நடிக்கும் மாஹா திரைப்படத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார்.

இப்படி சினிமா உலகில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வந்த இவர் 2007 ஆம் ஆண்டு வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும்  இருக்கும் புகைப்படங்கள் சமூக வலதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

srikantha and wife
srikantha and wife
srikantha and wife