அந்த விஷயத்தில் சந்தானத்தை ஓரங்கட்டிய சூரி!! மனுஷன் எங்க இருந்தாலும் தெளிவு தான் என பாராட்டும் ரசிகர்கள்..

santhanamsoori
santhanamsoori

தமிழ் சினிமாவில் ஒரு சிலர் காமெடி நடிகராக அறிமுகமாகி நல்ல வரவேற்பு கிடைத்து உடன் பின்பு ஹீரோவாக அவதாரம் எடுத்து நடித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சந்தானம், சிவகார்த்திகேயனை தொடர்ந்து தற்போது நடிகர் சூரியும் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

சந்தானம் ஹீரோவாக நடித்த ஒரு சில திரைப்படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தாலும் பல படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்து வருகிறது. அதற்கு காரணம் அவர் கமர்சியல் திரைப்படங்களில் நடிப்பதே காரணமாகும்.

இவர் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஹீரோ என்றால் காதல், காமெடி, ஃபைட், ரொமான்ஸ் போன்ற கதைக் கொண்ட திரைப்படங்களில் நடிப்பதால் இவரது படங்கள் தொடர்ந்து தோல்வி பெற்று வருகிறது.

அந்தவகையில் நடிகர் சூரி தற்போது காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். ஆனால்  இவர் அவற்றிலிருந்து முற்றிலும் மாறாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களையும் இயக்குனரையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதனாலேயே இவர் ஹீரோவாக வலம் வர அதிக வாய்ப்பு உள்ளது என கூறுகின்றனர்.

மேலும் இவர் தற்போது சூப்பர் ஹிட் இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருவதால் தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.