நம்பி பல கோடி ஏமாந்த நடிகர் சூரி.! கைவிட்ட பிரபல நடிகர்.. மொத்த பணத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடிய பிரபலம்

soori
soori

பொதுவாக சினிமா பின்னணி இருந்து இதன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிரபலமடைவது மிகவும் எளிமையான ஒன்றுதான். அப்படிப்பட்டவர்களுக்கு விரைவில் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் இவ்வாறு எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு அறிமுகமாகிய பிரபலமடைவது என்பது மிகவும் கடினமான ஒன்று.

மேலும் அந்த பிரபலங்கள் பல அவமானங்களை சந்தித்துதான் சினிமாவில் பிரபலமடைந்து இருப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி தான் சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது புதிதாக நடிக்க வந்ததால் பல அவமானங்களை சந்தித்துள்ளார். மேலும் அதன் பிறகு படிப்படியாக நகைச்சுவை நடிகராக நடிக்க ஆரம்பித்த இவர் தற்பொழுது ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.

இவ்வாறு ஹீரோவாக நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் மதுரையில் சொந்தமாக ஹோட்டல், சென்னையில் தனக்கு தேவையான அளவு சொத்து என பல வசதிகளுடன் வாழ்ந்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக விடுதலை திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் இவருடைய நடிப்பினை பார்த்து சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகிறார்கள்.

மேலும் தற்பொழுது விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சூரி நம்பிய ஒருவரால் ஏமாற்றப்பட்டு இருக்கிறார் அதாவது சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் ஓரளவிற்கு தான் சூரி வளர்ந்துள்ளார் அந்த சமயத்தில் ஹீரோ விஷ்ணு விஷால் உடன் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

எனவே சூரி விஷ்ணு விஷால் உடன் நெருங்கி பழக இதன் காரணமாக விஷ்ணு விஷாலின் அப்பா சூரிக்கு இடம் வாங்கி தருவதாக கூறி கிட்டத்தட்ட ஆறிலிருந்து ஏழு கோடி வரை ஏமாற்றி விட்டாராம். எனவே இதன் காரணமாக சூரி கோர்ட், கேஸ் என அழைத்த அலைய பிறகு இந்த நேரத்தில் விஷ்ணு விஷால் சூரிமேல் தான் தப்பு என ஊடகம் ஒன்றுக்கும் பேட்டி அளித்திருந்தார்.

எனவே அதன் பிறகு வேறு வழி இல்லாமல் மீண்டும் சம்பாதிக்க தொடங்கிய சூரி தற்பொழுது நினைத்த இடமெல்லாம் சொத்துக்களை வாங்கி குவித்து வருவதோடு மட்டுமல்லாமல் விஷ்ணு விஷால் அளவிற்கு சினிமாவிலும் உயர்ந்துள்ளார். இவ்வாறு தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறிய சூரிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.