ஒரு நாள் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் – பழைய நினைவுகளை பகரும் எஸ்.ஜே சூர்யா.!

sj-surya
sj-surya

எஸ் ஜே சூர்யா தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகராகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அந்த வகையில் எஸ் ஜே சூர்யா முதல் படமாக அஜித்தை வைத்து வாலி என்னும் படத்தை கொடுத்தார்.

இந்த படத்தில் அஜித், ஜோதிகா, சிம்ரன் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.  இந்த படம் அஜித் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவருக்குமே ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது பின்பு குஷி போன்ற அடுத்த அடுத்த பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார் மற்றும் அவர் இயக்கும் படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வந்தார்.

இப்படி தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் இயக்குனராக ஓடி வந்த எஸ் ஜே சூர்யா ஒரு கட்டத்தில் வில்லன் அவதாரம் எடுத்து spyder, மாநாடு போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். அதிலும் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பு மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போய் இவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

மாநாடு படத்தை தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவை பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவர்களது படங்களில் வில்லனாக கமிட் செய்து வருகின்றனர். தற்போது இவர் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது பழைய நினைவுகள் குறித்தும் முதல் சம்பளம் குறித்தும் பேசியுள்ளார்.

அவர் பேசியது “சினிமா தான் வாழ்க்கை என்றானதும் வீட்டில் பணம் வாங்காமல் கல்லூரியில் படித்து வரும்போது ஹோட்டலில் பில் போடும் வேலை பார்த்தேன். காலை 9.30 மணியிலிருந்து பில் போட்டுவிட்டு மதியம் 2 மணிக்கு சாப்பிடும் போது அப்படி இருக்கும்” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். என்ன இருந்தாலும் அந்த நாள் அந்த அனுபவம் அப்படித்தான் என மிக எமோஷனலாக அவர் பேசியுள்ளார்.