தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவகுமார் இவ்வாறு பிரபலமான நமது நடிகரை தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று அழைப்பது வழக்கம்தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நமது நடிகரின் நடிப்பு மட்டுமின்றி ஓவியம் மற்றும் சொற்பொழிவு போன்ற பல திறமைகளை கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் திரை உலகில் முதன்முதலாக காக்கும் கரங்கள் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள நமது நடிகர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு திரைப்படத்தில் மட்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அது வேறு எந்தத் திரைப்படமும் கிடையாது எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் உருவான புவனா ஒரு கேள்விக்குறி என்ற திரைப்படத்தில் தான் நடிகர் சிவகுமார் வில்லனாக நடித்திருந்தார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகுமாரின் கதாபாத்திரம் என்னவென்றால் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இவ்வாறு சிவகுமார் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது பல ரசிகர்களையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது. அதேபோல அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் நடித்திருப்பார். மேலும் சூப்பர் ஸ்டார் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் முதல் முதலாக ஹீரோவாக நடித்தது இந்த திரைப்படத்தில் தான்.
ஆகையால் இந்த திரைப்படத்தினை ரஜினி மட்டும் இன்றி சிவகுமாரும் மறக்க முடியாது. மேலும் நடிகர் சிவகுமார் இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்த போது ரசிகர்கள் பலரும் இது உங்கள் முகத்திற்கு ஒத்து வரவில்லை என கமெண்ட் செய்ததன் காரணமாக அதன் பிறகு எந்த ஒரு திரைப் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் சிவகுமார் நடித்தது கிடையாது.