தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக பட்டையை கிளப்பி வரும் சிவகார்த்திகேயனின் படங்கள் ஒவ்வொன்றும் 100 கோடிக்கு மேல் வசுலை அள்ளி சாதனை படைத்து வருகின்றன. டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி சிவகார்த்திகேயன் பிஸியாக நடித்து வருகிறார்.
மேலும் இவரது படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வசூலை அள்ளி வருகின்ற நிலையில் அடுத்தடுத்த படங்களுக்கு சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவருக்கு ஹீரோயினாக உக்ரையின் நாட்டு நடிகை மரியா நடித்து வருகின்ற நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்தியராஜ் இணைந்துள்ளார். அண்மையில் பிரின்ஸ் படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டதை அடுத்து படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்றன.
மேலும் இந்த படம் குறித்து தற்போது வந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி உள்ளனர், அது என்னவென்றால் இயக்குனர் அணுதீப் இந்த படத்தினை ஒரே கட்டமாக வெறும் 40 நாளில் மொத்த படத்தையும் முடித்து விட்டாராம். அதிலும் சிவகார்த்திகேயனின் மொத்த காட்சியையும் வெறும் 26 நாட்களில் முடித்துள்ளாராம்.
இருந்தாலும் சிவகார்த்திகேயன் அந்த 26 நாள் ஷூட்டிங்காக மட்டும் 23 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரங்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரையும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த ஒரு சில படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் கால் சீட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது