தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் சில திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கை ஆரம்பித்த சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் எதிர்நீச்சல்.
இந்த படத்திற்கு பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே, ரெமோ, என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயனின் ஒரு சிறிய இடைவேளையில் மார்க்கெட் சற்று சரியா ஆரம்பித்தது அப்போதுதான் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுத்த தூக்கியது.
அதன் பிறகு புதுமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் சற்று உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான பிரண்ட்ஸ் திரைப்படம் மிகப் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது.
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த படம் வெளியாகி கடுமையான விமர்சனத்தை பெற்றது மட்டுமில்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் பல விமர்சனத்திற்கு உள்ளானார்.
மேலும் பிரின்ஸ் படத்தின் தோல்வியினால் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களுக்கு எதிர்ப்பு வந்து கொண்டே இருந்தது இதையெல்லாம் எப்படி சரி கட்ட போகிறார் என்று எண்ணியிருந்த பலருக்கு தற்போது அவர் செய்த செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பிரண்ட்ஸ் திரைப்படத்தை விநியோகம் செய்த நிறுவனத்திற்கு நஷ்டம் அடைந்ததில் பாதி பணம் கொடுப்பதாகவும் மீதி பணம் தயாரிப்பு நிறுவனம் கொடுப்பதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரின்ஸ் படத்தின் வினியோகஸ்தர்கள் மொத்தமாக ஆறு கோடி செலவு செய்தார்கள் இந்த ஆறு கோடியும் அவர்களுக்கு நஷ்டமாக மாறியது.
இதனால் நடிகர் சிவகார்த்திகேயனும் பிரின்ஸ் படம் தயாரிப்பு நிறுவனமும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் அடைந்த ஆறு கோடியை திருப்பி தருவதால் பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் ஒரு முன்னணி நடிகர் தயாரிப்பு நிறுவனத்தின் நஷ்டத்தில் பங்கெடுப்பது ஆச்சரியமான செயல் தான் என்று நடிகர் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகிறார்கள்.