வட்டி குட்டி போட்டு ஒரேடியாக பெருகிய கடன்..! வேறு வழி இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் செய்த செயல்..!

siva-1

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறுசிறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமை மூலமாக தற்போது வெள்ளித்திரையில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் மற்ற நடிகர்களைப் போல தன்னுடைய சொந்த பந்தம் மூலமாக சினிமாவிற்கு வரவில்லை.

அந்தவகையில் இவர் சினிமாவில் நுழைவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய சிறந்த பேச்சும் திறமையும் தான் காரணம் இவ்வாறு படிப்படியாக தன்னுடைய திறமையின் மூலம் தொகுப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார் இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து வருத்தபடாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன் ரெமோ வேலைக்காரன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் சிறந்த கதை அம்சமுள்ள திரைப்படங்களை தேடி தேடி நடித்ததன் மூலமாக எளிதில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றது மட்டுமல்லாமல் தற்போது சினிமாவில் ஒரு அங்கமாக இருந்து வருகிறார்.

பொதுவாக புகழின் உச்சத்திற்கு சென்றால் பல செயல்களை செய்து பார்க்கத் தோன்றும் அந்த வகையில் நமது சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார் இதன்காரணமாக அவர் தயாரித்த திரைப்படங்கள் அனைத்தும் படுதோல்வி அடைந்து மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார்.

sivakarthikeyan-001
sivakarthikeyan-001

அந்தவகையில் தற்போது வருடத்திற்கு ஒரு திரை படத்தில் மட்டும் நடித்து வந்த சிவகார்த்திகேயன் கடன் தொல்லை காரணமாக  தற்போது  ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம் அந்த வகையில் டான் சிங்கப்பாதை, அயலன் ஆகிய திரைப்படங்கள் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.