பல நடிகர்கள் விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற தத்துவத்திற்கு உதாரணமாக சிவகார்த்திகேயனை கூறலாம். இவர் விஜய் டிவியில் காமெடி ஷோவில் கலந்துகொண்டு இதன் மூலம் பிரபலமடைந்து விஜய் டிவியில் தொகுப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.
இவரின் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பினாலும் தற்பொழுது வெள்ளித்திரையில் அசைக்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது இவர் டாக்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது. எனவே ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் ரிலீஸுக்காக எதிர்பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது மாமா பொன்னான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற அழகிய பெண் குழந்தையும் உள்ளது. ஆராதனா யார் இந்த தேவதை பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகளுடன் பேருந்தில் செல்லும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.