தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பின்பு மக்களிடையே பிரபலமாகி விஜய் தொலைக்காட்சியிலே பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
ஆம் அந்த வகையில் இவர் அது இது எது, கலக்கப்போவது யாரு, விஜய் டெலி அவார்ட்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மீடியா உலகில் பிரபலம் ஆகி பின்பு இவர் வெள்ளித்திரையில் மெரினா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்பு இவரது காமெடி கலந்த நடிப்பின் மூலம் பல்வேறு திரைப்படத்தில் முன்னணி ஹீரோயின்களுடன் இணைந்து சிறப்பாக நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரி குவித்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் திரைப்படம் கூடிய விரைவில் வெளிவர உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.
மேலும் இதில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடிக்க உள்ளார்.
மேலும் சிவகார்த்திகேயனின் 20-வது படத்தில் ஒரு புதுமுக நடிகை ஹீரோயினாக நடிக்க உள்ளாராம் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணை காதலிப்பது போல் தான் கதை இருக்கிறதாம் இதனால் மரியா என்ற வெள்ளைக்கார பெண்ணை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கமிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.